Saturday, November 19, 2005

வருக... அனைவருக்கும் வணக்கம்!

- டாக்டர் அ.சாந்தா -
நீண்ட காலமாகவே, வலைப்பூ பயிற்சி இதழில் மாணவர்கள் எழுத வேண்டும் என்று விரும்பினேன். தற்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாணவர்கள் வேண்டிய போது, தாங்கள் விரும்பியவற்றை எழுதி தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும்.பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதும் அதே உற்சாகம் மாணவர்களிடம் இங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.வாசகர்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவை அனைத்தும் மாணவர்களின் முயற்சிக்கு பெரும் ஊக்கம் அளிக்கும். வணக்கம்.

- துறைத் தலைவர், இதழ் ஆசிரியர்

தமிழ் விக்கிப்பீடியாவின் அருமையான முயற்சி

அன்றாடம் ஆயிரக்கணக்கான தன்னார்வ எழுத்தாளர்களால், புதுப்பிக்கப்படும் விக்கிப்பீடியாவின் தமிழ் முயற்சி மிகச்சிறப்பு. தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது கட்டுரைகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. கடந்த 2003ல் தொடங்கப்பட்ட இப்பணியில் தற்போது கட்டுரைகள் எண்ணிக்கை 1,681. தமிழ் விக்சனரி (விக்கிப்பீடியா தமிழ் அகராதி) முயற்சியும் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் படைப்புகளை வழங்கும் அனைத்து வீக்கிப்பீடியர்களுக்கும் இதழியல் துறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஹாரி பாட்டர் முதல் வளிமண்டல கரி வரை

துறை மாணவர்களுக்கான இந்த பயிற்சி இதழ், அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக்குவதற்கான ஒரு களம். இங்கு திரைப்படம் முதல் அறிவியல் வரை எந்த துறையானாலும், அவர்கள் விரும்பும் எந்தப் பகுதியிலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.விரைவில் இப்பகுதியில் நீங்கள் செய்தி, தகவல், கட்டுரை மற்றும் கதைகளை எதிர்பாருங்கள்.