Thursday, February 9, 2006

Why don’t the women react?

- VK Anushree -
We are living in Manu’s country. Manu, as we all know rejected freedom for women in any phase of her life (Na stree swathantriyam arhiti-Manu Smriti). When these great rulers tried to kill her identity, some parents are trying to kill their girl-child. The girl-children have to fight for the right to be born-let alone the right to expression.Indian society is highly patriarchal. The head of the family and so also the decision-taker is the male-member. When it comes to important decisions regarding the life of the girl-child (she is a member of the family), the decision is used to be taken by a male. First, he decides whether she would be born or not. Regarding education and marriage, the female society is completely and perfectly voiceless. She cannot choose the right course for study and the right person to marry. All decisions come from others and she will be kept silent although the trend shows some changes now a days.Our society as a whole does not want a woman to express herself boldly. How many controversies we have seen in recent times? It is in our country, people burnt Tazlima Nazrine’s ‘Lajja’. Films like ‘Fire’ and ‘Water’ had been banned even before the first show. Even Sania Mirza’s dress code has been questioned. Above all, for how many years we have been trying to get 33% seat reservation for women in the Indian Parliament?Now, let us consider another dimension of the problem. Here, who is the enemy of the women? The society, the male counterparts or they themselves? There is no meaning in abusing others. Most of the time, we have to admit that we are our own enemies.Women are always ready to obey male instructions; not to question them. First, we must learn to analyse what we are told. For centuries, we have been obeying and obeying others. We are living in rigid framework which we ourselves do not want to break. That is why when a Kushboo or any other woman say her opinion in public boldly we the women become aggressive.Indian woman’s life is mainly based on her family. She had a security feeling when she is under the protection of her family. She does not want to mar her safety and security by coming to the forefront to react. She is really afraid of “freedom”. She is not prepared to sacrifice the smooth-going life. We do not want to face any problem.But, as we look back, the human race has gained nothing without facing oppositions. Let us consider our freedom struggle for example. It was not a cake-walk. Why cannot we, the women face some problems to earn a more dignified way of living; to earn our right to say what is in our mind? We must take the initiative here. We cannot expect our male counterparts to do everything for us.

Racks and Ruins in train journey

- Sumeet -
Usually, train journeys are said to be very homely. Amenities like latrine and food make the passengers feel comfortable. Travelling through train is quite convenient for long journeys. These facilities make us feel at home in reserved compartments. Mostly long travelers prefer reserved compartments because they can sleep and sit pleasantly in train than bus. The decrease in ticket rate caused a remarkable hike in the number of passengers.Both facilities and disturbances in train increasing proportionately. Interference, have been crucial while traveling in train. The passengers have to face a variety of problems during their journey. Disruption are getting increased both in reserved and in unreserved compartments. People face decisive problems like Gambling, Drinking, Littering,Commotion etc inside the bays.Gambling, a form of organized game, may be a timepass for the travelers, But, the proportions it is being played now a days are alarming. “Ecstasy and timepass” we feel, while playing, says a passenger. It is fatally evolving in to a social problem. Gambling in all trains almost has led to violence and problems. People bet their money on numbers for fun. Even women take part in gambling. It is prohibited under Gambling Act of 1867 and is a minor offence and a punishable crime. Our police personnel are very vigilant in raiding local places. But, in case of train, they are lazy. Even the Railway Police Force (RPF) is ineffective where gambling is considered. The maximum punishment is a fine of Rs 500 to 1,000 and imprisonment. The railway authorities are not coming forward to act against such crimes.The ordinary travelers cannot cope up with such situations. Like Gambling, there are other problems like littering and commotion. Travellers usually don’t keep the latrines clean. It challenges the health of the passengers. Our “Health and Hygiene” remain as a question in our country. It may cause some disease.Theft and Robbery are increasing in our trains, especially in reserved bogies. Usually, people traveling in reserved cabins need rest and sleep. But, some make use of such opportunities. This problem is very critical in ladies compartment also. Women are involving in such crimes. This becomes a great mystery for the passengers.Whether the women are safe in the train? Definitely, they are not. Because crimes like sexual harassment and molestation are taking place in trains. Many rape cases are reported in the past years. A recent event in Mumbai stated that a 20-yrs-old woman was allegedly raped by a young man while she was traveling with her family. These happenings questioned the chastity of women community.The government must direct the police to act accordingly against such crimes. So that justice prevails and the perpetrators of such heinous crimes were punished.

மரணதண்டனை வேண்டுமா?

சென்ற வாரம் உலகையே சர்ச்சைக்குள்ளாக்கிய விஷயம் ஆஸ்திரேலியர் ஒருவர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூயொண்டு வோங் வான், 25 வயதான இளைஞர் போதை பொருளைக் கடத்தினார் என்று சிங்கப்பூர் அரசு செய்தது, சிங்கப்பூரில் தண்டனைகள் மிக கடுமையாக இருக்கும். போதை பொருள் கடத்தி வந்ததற்காக மரண தண்டனை சிங்கப்பூர் அரசு அளித்தது. இத்தீர்ப்பு ஆஸ்திரேலியாவில் பெரும் புயலைக் கிளப்பியது. ஆஸ்திரேலியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசும், மக்களும் இதை எதிர்த்தனர். உலகளாவிய சமுக இயக்கங்களும், மனித உரிமை சங்கத்தினர்களும் தண்டனையை குறைக்கும்படி சிங்கப்பூர் அரசை கேட்டு கொண்டார்கள். சிங்கப்பூர் பிரதமரிடம் கருணை மனுவை வோங் வான் குடும்பத்தினர் அளித்தனர். வோங் வானின் தண்டனையை குறைக்கும்படி அம்மனுவில் கேட்டு கொண்டனர். ஆனால் அந்நாட்டு பிரதமர் கருணை மனுவை நிராகரித்துவிட்டார். இதனால் வோங் வானின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து மனித உரிமை சங்கத்தினரும், எதிர்ப்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. வோங் வான் குறிப்பிட்ட நேரத்தில் தூக்கிலிடப்பட்டார். ஆஸ்திரேலிய அரசு வக்கீல் பிலிப்ருடோக் இந்த மரண தண்டனையை காட்டு மிராண்டி தனம் என்று கண்டித்துள்ளார். சுற்றுலா நாடான சிங்கப்பூர் அரசின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது.மரண தண்டனைக்கு எதிராக குரல்கள் இன்றல்ல, சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே ஓங்கி ஒலித்தது. தண்டனை என்பது மனிதனை சீர்திருத்துவதாக இருக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் நோக்கோடு இருக்க கூடாது. பொதுவாகவே மரணதண்டனை கொலை குற்றம் புரிபவர்களுக்கு அளிக்கப்படும். ஒரு கொலைக்கு மற்றொரு கொலை தீர்வாகுமா? என்பது தான் நம் கேள்வி. மரண தண்டனையால் குற்றவாளிகள் சீர்திருத்துவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. உலகில் 120 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. 27 நாடுகளில் சட்டப்படி ஒழிக்கப்படாவில்லையென்றாலும் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை ஐரோப்பா முழுவதும் மரண தண்டனை தரப்படுவது இல்லை. அமெரிக்காவில் பல மாகாணங்களில் மரண தண்டனை கிடையாது. பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ மரணதண்டனையை எதிர்த்து எழுதிய ‘தி கில்லடின்’ எனும் சிறுநூல் இன்றளவும் மரண தண்டனைக்கு எதிரான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அகிம்சையைக் கொள்கையாகக் கொண்டு விடுதலை பெற்று தந்த காந்தியடிகள் பிறந்த நம் நாட்டில் மரண தண்டனை ஒழிக்கபடவில்லை. பிறர் உயிர்களை நேசிக்கும்படி உலகத்துக்கே எடுத்துக் கூறிய புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் நம் நாட்டில் தான் பிறந்துள்ளனர் 1980ல் மரண தண்டனைக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ கொண்டு வந்த தனிநபர் மசோதா மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. 1998ஆம் ஆண்டுபூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய விவாதமும், எதிர்ப்பும் நடைபெற்றது. பின்னர் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபட்டது. உச்ச நீதிமன்றம் இந்த 26 பேருக்கும் மரண தண்டனையை ரத்து செய்தது நிதிமன்றமே மரண தண்டனை வித்தாலும், அதை ரத்து செய்யும் அதிகாரம் நம் நாட்டில் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது.இந்தாண்டு அக்டோபர் 17ஆம் நாள் மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரிக்கப் பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கோப்பு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் இக்கோப்பு ஜனாதிபதி அப்துல்கலாம் அதை மீண்டும் நிராகரித்தார். குற்றவாளியின் நடத்தை, குடும்ப பின்னனி அவர்களுடைய வயது உடல்நிலை போன்றவைகளை ஆய்வு செய்துஇந்தஉலகில் வாழும் எஞ்சிய நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வாழ வழிவிட வேண்டும் என்று நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.மரணதண்டனைக்கு எதிராக உலகளவில் விவாதம் நடைபெற வேண்டும். மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.

Sunday, February 5, 2006

துள்ளுவதும் இளமை - வெல்லுவதும் இளமை

- நேரு நாகராஜன் -

மனித வாழ்க்கையின் முக்கியப் பருவம் இளமைப் பருவம். இப்பருவம் அளப்பரிய ஆற்றலைத் தன்னகத்தே கெண்டுள்ளது. இவ்வாற்றல் பிறப்பிலேயே கொடுக்கப்பட்ட இலவசக் கொடை, இவ்வாற்றலை அறிவியல் பூர்வமாகத் திட்டமிட்டுச் சரியாகப் பயன்பபடுத்துகின்ற இளைஞர்கள் வாழ்விலும், சமூகத்திலும் வெற்றி காணப்hர்கள். இந்த வெற்றி காண்கின்ற வரிசையில் சிலர் மட்டுமே இருக்கிறார்கள் பலர் இல்லை என்பது வரலாறு தரும் வருத்தமான சான்று. இளமைப் பருவம் என்றாலே துள்ளித திரியும், ஆடிப்பாடி மகிழும் கூடிவந்து கும்மாளமிடும், தடுமாற வைக்கும், தடம்மாறிப்போகத் தூண்டும், புதுத்தடங்களையும் பதிக்கும், தன்னை உருவாக்கும், பிறருககு உருவம் கொடுக்கும் பருவம் இளமைப் பருவம். ஒரு நாட்டின் மனித வள மேம்பாடு என்பது பெரும்பாலும் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தையும் திறனையும், பொறுத்தே அமையும். இவ்வுண்மையை உணராத இன்றைய இளைஞர்கள் தம்மையே தமக்குள் தொலைத்து விட்டு, வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சாதிக்கும் திறனிருந்தும் அதைச் சோதிக்கும் முயற்சி துளி கூட இல்லை. வந்த இடம் தெரியாமல், வாழும் விதமுளம் புரியாமல், வெறுமையாக முகவரியில்லாத கடிதங்களாக முடங்கிக் கிடக்கிறார்கள்.இளமை - கனவு பாசைறை: அன்று மார்டின் லூதர் கிங் சொன்னாரே ’எனக்கொரு கனவுண்டு’ என்று, கனவின் கருப்பையில் கருப்பின விடுதலையைத் தேடி அதை முழுவதும் அடைந்து வெற்றி கண்டாரே. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு கண்டார் அதனைச் சாதனையாக்கினார். எதிர் காலத்தைப் பற்றி கனவுகளை உருவாக்கிக் கொள்பவர்கள் தங்களுக்கென்று ஓர் இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி நடந்து சாதனைப் புரிகின்றனர்.ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வெற்றி இருக்கிறது என்றால அதற்குக் காரணம் அவன் எண்ணத்தில் கரு எடுத்த கனவேயாகும். அவ்வாறே ஒவ்வொரு சமூகத்தின் விடுதலையும் சில மாமனிதர்களின் எண்ணக்கருவின் கருப்பையில் உருவான கனவே என்பது அனைவரின் வாழ்வும் கூறும் சான்றுகள். இன்று மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் ‘கனவுக்காண்கிறார்’. 2020தல் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று அதுமட்டுமா இளைஞர்களே கனவுக் காணுங்கள் என்று முழங்குகிறார் அவரின் ஆழ்மனத்தில் கரு எடுத்த கனவு இன்று நம்மையும் கனவுக் காண அழைக்கின்றது. “என்னைப் பொறுத்தவரையில் வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக இந்தியா மறுவடிவம் பெறுவதற்கான ஆற்றல் இளைஞர்களிடம் உள்ளது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை”. என்கிறார் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்.இளமை - வெல்லத்துடிக்கும்: எந்த நேரத்திலும் இயங்கத்துடிப்பது இளமை. விழிகளுக்குத் தெரியாமல் புதைந்து கிடப்பதைத் தோண்டிப் பார்க்கத் துடிப்பவனே சிகரத்தைத் தொடுகிறான். சிலரைக் கொள்கைகள் ஊக்கிவிக்கும், சிலரைச் செய் கைகள் ஊக்குவிக்கும். இளையோர் சாதிக்கக் கூடியவர்கள் திறமைமிக்கவர்கள், ஆற்றல் படைத்தவர்கள், நினைத்ததை நிறைவாக முடிக்கக் கூடியவர்கள், உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள், உண்மைக்கும் நீதிக்கும் சாட்சியம் சொல்பவர்கள், வரலாற்றையே வடிவமைப்பவர்கள். இன்று இந்தியா வெற்றியடைந்த, வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது என்றால நமது இளம் தலை முறைகளின் இதயத்தில் ஏற்பட்ட தீப்பொறியாகிய கனவே காரணம். கணினி மென்பொருள்துறை, வணிகத்துறை, மேலாண்மைத்துறை, தொடர்பு சாதனைத்துறை விஞ்ஞானத்துறை, மருத்துவத்துறை. . . . இப்படி எல்லாத் துறைகளிலும் சாதனைப் புரியும் இளையத்தலைமுறையின் பெரும் சக்தியையும், ஆற்றலையும் , தன்னம்பிக்கையும் பாராட்டுவோம். இன்றும் இந்தியாவின் வளர்ச்சிககு கனவுகாண இளஞ்சிட்டுக்களுக்கு அழைப்புவிடுவோம்.இளமையை அழிக்கும் சக்திகள்: இன்று இளைஞர்களை அழிக்கும் சக்தியாக இருப்பவை வேலையில்லா திண்டாட்டமும், அரசியல் வாதிகள், பணமுதலைகளுக்கு அடியாட்களாக பயன்படும் அடிமத்தன எண்ணமுமாகும். கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள், இணையதளம், மற்றும் செல் இடைத் தொடர் பேச்சிற்கு அடிமையாதல், மேல்நாட்டுக கலாச்சாரம் ஆகியவற்றிறளகிடையே இளைஞர்களுக்கு இலட்சியப் பிடிப்பும், சிந்தனைத் தெளிவும் செயல் திறனும் அதிக மாகத் தேவைப்படுகிறது. இதைக் கொடுப்பதில் கல்வி நிறுவனங்கள் கலாச்சார அமைப்புகள், சமூகத்தொடர்புச் சாதனங்கள் ஆகியவை முனைப்போடு செயலாற்றுகின்றனள.தோல்விக்குள் புதைந்துள்ள மாபெரும் சக்திகள்: “வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்” இளமை என்னும் போதே இதயத்தில் விளைவது இனிமை, அதனுள் அடங்கியிருப்பது வலிமை. “பு லி கூடத் தயார் நிலையில் இல்லை என்றால்எலிகூட ஏறெடுத்துப் பார்க்காது”.என்பது முதுமொஒவ்வொரு இளைஞனும் தனிப்பட்ட ஆற்றல்களோடு பிறந்திருக்கிறான். உலகம் தட்டை அல்ல, உருண்டை தான் என்றதனால் கலிலியோவுக்கு விழுந்த கல்லெறிகள் எத்தனை? நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் - அவருக்கு ஏற்பட்ட தடைக்கற்கள் ஒன்றா இரண்டா? ஓராயிரமல்லவா ஆனால் அவர் கால்கள் ஓய்ந்தனவா? மனம் மயங்கியதா? இல்லையே? சந்திரனைக் கண்டது மனித சக்தி சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி இந்திரன்தான் விண்ணாட்டின் அரசன் என்ற இலக்க ணத்தை மாற்றியது மனித சக்தி.ஒரு சின்னஞ்சிறிய விதை மண்ணுக்குள் புதைக்கப்படும் பொழுது செத்துவிடுவதில்லை புவியீர்ப்பு விசையையும் விஞ்சி அது மேலே தலை உயர்த்துகிறது. மரங்கள் எல்லாம் ஒற்றைக்கால் தவசிகள். தாம் மண்ணுக்குள்ளே இருக்கும் விதை மேலே அழுத்திக்கெண்டிருக்கும் கல் பாறை அனைத்தையும் மீறி வெயிலிலும், மழையிலும், காற்றிலும் முடங்கிவிடாது, ஒற்றைக் காலில் நின்று உய ர்வேன் என்று பிடிவாதமாக வளர்ந்து உயர்கிறது. ஆறறிவுபடைத்த இளைஞனே நீ ஓரறிவு படைத்த மரத்திற்கு முன்பு தோல்வியைத் தழுவலாமா? உள்முகமாகத் திரும்பட்டும். உனக்குள் தான் எத்தனை எத் தனை தொட்டனைத்தூறும் ஜீவ ஊற்றுக் கண் கள்! சிங்க இளைஞனே, திருப்பு முகம் திற விழி என்ற பாவேந்தர் அழைப்பு உனக்குள் கேட்கவில்i லயா?இளமையின் வேகம், விவேகம்: இளைஞர்களுக்கு விவேகம் இல்லாமல் வேகம் இருப்பதால் தான், அதை வீரம் என்று நினைத்து தங்களையும் அழித்துக்கொள்கிறார்கள், பிறரையும் கொல்லுகிறார்கள். வீரம் என்பது வன்முறையில் இறங்கிப் பிறரைப் காயப்படுத்துவதா? பேருந்துகளை உடைப்பதா? மாணவிகளை எரிப்பதா? சில்லறை விஷ்யத்திற்காக, சின்னப்பிரச்சினைக்காக மனம் துவண்டு போய் செத்துப் போவதா? குஜராத்தில் வீடுகளை எரித்ததும, அப்பாவிகளை கொன்றதும், பெண்களை கற்பழித்ததும் இளைஞர்கள் தானே. வீரத்திலேயும் விவேகம் வேண்டும். இளமையில் விதைத்ததைத் தான் வாழ்க்கையின் முதுமையில் அறுவடை செய்வோம். உனக்குள் இருக்கும் மாபெரும் சக்தியைக் கொண்டு ஆக்கத்தை உருவாக்கு, அழிவினை அகற்றிவிடு. விழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எல்லாம் உழைத்துக் கொண்டே இருப்போம். நம் நாட்டை வளரும் நாடு என்னும் நிலையிலிருந்து ‘வளர்ந்த நாடு’ ஆக உருவாக்குவோம் தகுதியால், தன்னம்பிக்கையால், குறிக்கோளால், திட்டத்தால், உழைத்து, முன்னேறுவோம். ஒரு நாள் மூன்று இளைஞர்கள் முனிவரிடம் சென்றனர். அதில் ஒருவர் கையில் ஒரு பூச்சை வைத்துக் கெண்டு முனிவரிடம் கேட்டார். முனிவரே என்கையில் இருக்கும் பூச்சி உயி ருடன் இருக்கிறதா? இல்லை இறந்துள்ளதா? என்றார். அதற்கு முனிவர் கூறனார் கையில் இருக்கும் பூச்சியானது உயிரோடு இருப்பதும், இறந்து இருப்பதும் உன கையில் தான் உள்ளது என்றார் முனிவர். இது ஒரு சிறுகதையாயினும் நமது இளைஞர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நமது நாட்டின் வளர்ச்சி இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்களின் புதிய, புதிய கனவுகளும் கண்டுபிடிப்புகளும், தேடல்களும் தான் இந்திய வளர் ச்சியின் ஏணிப்படிகளாக உள்ளன. நம்பிக்கை என்பது உள்ளே நிகழும் உயிர்ச்சுவாசம் இளைய செடி களுக்கு இது ஒரு தாரக மந்திரம், விரக்தி, சலிப்பு, ஏமாற்றம் இவையனைத்தும் காற்றில்எழும் தூசிகளே நெப்போலியன் ஹூல் என்பவர் “என்னுடைய மனதில்தோன்றும் நம்பிக்கைகளே ஒரு நோக்கத்தை அடையக் காரணமாய் இருக்கின்றன” என்கிறார். இளைஞர் எண்ணத்தில் எது கருவின் கனவாக உருவெடுக்கிறதோ. அதுவே செயலாக உருவெடுத்து, கடினமாக உழைக்கச செய்கிறது. அதன் விளைவால் ஏற்படும் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் சாதனையின் உச்சிக்கு அழைத்து செல்கின்றன. நாட்டையும் வளர்ச்சிப பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

Friday, February 3, 2006

நம்முடைய உயரம் நம் எண்ணத்தின் உயரம்

சுகி.சிவம் பேச்சு
- பொன்ராஜ் -

பேச்சுபள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரும், படித்து முடித்து வேலைதேடும் இளைஞர்களும் சாரைசாரையாய் ஆஜராக, இராஜபாளையம் பி.ஸ்.கே. நூற்றாண்டு விழா திருமண மண்டபமே நிரம்பி வழிந்தது.ஸ்கோப் 2005 என்ற பெயரில் இராஜபாளையம் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த மாணவ, மாணவவியருக்கான வேலை வழிகாட்டி நிகழ்ச்சியின் ஸ்பாட் தான் இந்த பி.ஸ்.கே. திருமண மண்டபம்.நுழைவுக் கட்டணம் ஐம்பது ரூபாய் என்றாலும் காற்று புக முடியாத அளவுக்கு அரங்கத்தில் கூட்டம் அலைமோத காரணம் இருந்தது.அது -சுகி.சிவம்.பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தககள், ஒலிநாடாக்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், தன்னம்பிக்கை உரைகள் என வெவ்வேறு தளங்களில் தனது சொல்லாற்றலால் வெற்றிக் கொடி நாட்டி வரும் சு.கி. சிவத்தின் உரைக்காக மாணவர்கள் தவம் கிடக்க வேண்டியதாயிற்று. 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கடைசிவரை கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்ள விழாக் குழவினார் நிகழ்ச்சி நிரலில் கடைசியாக சுகி. சிவத்தின் உரையை போட்ட டெக்னிக்தான் மாணவர்கள் காலை முதல் மாலைவரை மாதவம் செய்யக் காரணமாயிற்று.காலை தொடங்கி மாலை வரை ராஜுக்கள் கல்லூரி முதல்வர் டாக்டர்.வி. வெங்கட்ராமன் (வெற்றிக்கு ஏழு படிகள்), இதயம் முத்து (சுயதொழில் மந்திரம்) சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி பேராசிரியர் (ஓய்வு) ராமச்சந்திரன் (உன்னால் முடியும் தம்பி) பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி (நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?) ஆகியோர் கலக்கலாய் உரையாற்றி அமர்ந்து விட பொன் மாலைப் பொழுதில் தன் உரையை தொடகினார் ----. வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் மனிதர் சென்னை வெள்ளம் போல் பின்னி எடுத்துவிட்டார்.கை தட்டல் மழை பொழிந்த மாணவ மாணவியருக்கு அவரது கருத்துக்கள் ஒவ்வொன்றும் பூஸ்ட். அசரவைத்த உரையிலிருந்து...வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பினை இங்கே பார்க்கிறேன். நீங்கள் எந்தக் கைகளை தட்டினீர்களோ அந்தக் கைகளில்தான் இந்தியாவை மாற்றக்கூடிய சக்தி உள்ளது என்பதை உங்களுக்கு புரிய வைத்துவிட்டால் என் வேலை முடிந்துவிடும்.எப்போதும் அடுத்தவர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்காதீர்கள், உங்களை நீங்களே அங்கீகரியுகள். உலகே முதலில் பாரதியின் கவிதையினை புறக்கணித்த போது தமிழ்நாட்டுக்கு கவியரசர் இல்லை என்ற பழி என்னால் போகும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினானே அந்த தன்னனம்பிக்கைதான் அவனை வாழ வைத்தது. மற்றவர்களின் அபிப்பிராயங்களல்ல.தாழ்வு மனப்பான்மையை தள்ளி விடுங்கள். உலகப்பேரழகியை கூட மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் அவள் கன்னங்கள் மேடு பள்ளமாகத்தான் இருக்கும்.நீங்கள் அழகின்றி படைக்கப்பட்டதாக நினைத்தால் அதற்கு வெட்கப்பட வேண்டியது நீங்களல்ல., ஆண்டவன்தான்.கறுப்பாக இருப்பதால் கவலைப்படாதீர்கள். நம் பாட்டி,பாட்டன் எல்லாம் உழைத்த பரம்பரை என்பதால்தான் நாம் கறுப்பு. அதற்காக நாம் பெருமைப்பட அல்லவா வேண்டும். எப்படி படைக்கப்பட்டிருக்கிறீர்களோ அதை கொண்டாடுங்கள்.புடித்த குடும்பத்தில் இருந்து படித்தவன் வருவதில் பெருமைப்பட ஒன்றுமில்லை.படிக்காத குடும்பத்தில் இருந்து படித்து வருகிற நீ அதற்காக பெருமைப்பட வேண்டுமே தவிர சிறுமைப்படக் கூடாது.மாற்ற முடியாதபடி இருக்கின்றவற்றை மாற்றுவதில் தான் உங்கள் வெற்றி உள்ளது. ஆங்கிலம் பிழையின்றி பேசுங்கள், திருத்திக் கொள்ளலாம். பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். காந்திஜி, விவேகானந்தர் கூட ஆங்கிலத்தை பிழையோடு எழுதியவர்கள்தான்.வாத்தியாரைப் பார்த்து ரொம்பவும் பயப்படாதீர்கள். ஆவர் நமக்கு முந்தைய செட் அவ்வளவுதான். கிரிக்கெட் ஒரு கீதா உபதேசமென நான் எழுதியிருக்கிறேன். கிரிக்கெட் ஆட ஒருவன் களத்தில் இறங்கினால் அவனை அவுட் ஆக்க பல பேர் இருப்பார்கள். வாழ்க்கையிலும் அப்படித்தான்.சாராயக்கடைகளால் ஆண்கள் முட்டாளாகிப் போனது போல தமிழ்நாட்டுப் பெண்கள் சீரியல்களினால் முட்டாளாகிப் போனார்கள்.இப்படிப்பட்ட பெற்றோரை மன்னியுங்கள். அவர்களின் தோல்வியை சொல்லிக் கொண்டே நீங்களும் தோற்றுப் போகாதீர்கள்.எவ்வளவு படிக்க முடியுமோ படியுங்கள். எவ்வளவு மொழி உங்களுக்கு தெரிகிறதோ அவ்வளவு பலசாலி நீங்கள்.நான் ஒரு கதை சொல்வதுண்டு. திருவள்ளுவர் தாமரையின் உயரம் என்ன? என்று ஒரு மாணவனிடம் கேட்டார். அவன் தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம் என்றான். அடுத்த கேள்வியைக் கேட்டார் உன் உயரம் என்ன? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளித்தால் எதையும் வெல்லலாம். வாழ்க்கையில் நம்முடைய உயரம் நம் எண்ணத்தின் உயரம்தான்.ஆரவார கைதட்டலோடு விழா முடிந்ததும் கிளம்பிய மாணவர்களுள் ஒருவன் சொல்லிச் சென்றான். இனிமேல் ஒழுங்கா தினமும் படிக்கணும்.இவ்விழாவின் வெற்றியை போல கலந்து கொண்ட மாணவர்களுக்கும் இனி வெற்றி நிச்சயம்தான்.