Sunday, February 5, 2006

துள்ளுவதும் இளமை - வெல்லுவதும் இளமை

- நேரு நாகராஜன் -

மனித வாழ்க்கையின் முக்கியப் பருவம் இளமைப் பருவம். இப்பருவம் அளப்பரிய ஆற்றலைத் தன்னகத்தே கெண்டுள்ளது. இவ்வாற்றல் பிறப்பிலேயே கொடுக்கப்பட்ட இலவசக் கொடை, இவ்வாற்றலை அறிவியல் பூர்வமாகத் திட்டமிட்டுச் சரியாகப் பயன்பபடுத்துகின்ற இளைஞர்கள் வாழ்விலும், சமூகத்திலும் வெற்றி காணப்hர்கள். இந்த வெற்றி காண்கின்ற வரிசையில் சிலர் மட்டுமே இருக்கிறார்கள் பலர் இல்லை என்பது வரலாறு தரும் வருத்தமான சான்று. இளமைப் பருவம் என்றாலே துள்ளித திரியும், ஆடிப்பாடி மகிழும் கூடிவந்து கும்மாளமிடும், தடுமாற வைக்கும், தடம்மாறிப்போகத் தூண்டும், புதுத்தடங்களையும் பதிக்கும், தன்னை உருவாக்கும், பிறருககு உருவம் கொடுக்கும் பருவம் இளமைப் பருவம். ஒரு நாட்டின் மனித வள மேம்பாடு என்பது பெரும்பாலும் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தையும் திறனையும், பொறுத்தே அமையும். இவ்வுண்மையை உணராத இன்றைய இளைஞர்கள் தம்மையே தமக்குள் தொலைத்து விட்டு, வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சாதிக்கும் திறனிருந்தும் அதைச் சோதிக்கும் முயற்சி துளி கூட இல்லை. வந்த இடம் தெரியாமல், வாழும் விதமுளம் புரியாமல், வெறுமையாக முகவரியில்லாத கடிதங்களாக முடங்கிக் கிடக்கிறார்கள்.இளமை - கனவு பாசைறை: அன்று மார்டின் லூதர் கிங் சொன்னாரே ’எனக்கொரு கனவுண்டு’ என்று, கனவின் கருப்பையில் கருப்பின விடுதலையைத் தேடி அதை முழுவதும் அடைந்து வெற்றி கண்டாரே. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு கண்டார் அதனைச் சாதனையாக்கினார். எதிர் காலத்தைப் பற்றி கனவுகளை உருவாக்கிக் கொள்பவர்கள் தங்களுக்கென்று ஓர் இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி நடந்து சாதனைப் புரிகின்றனர்.ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வெற்றி இருக்கிறது என்றால அதற்குக் காரணம் அவன் எண்ணத்தில் கரு எடுத்த கனவேயாகும். அவ்வாறே ஒவ்வொரு சமூகத்தின் விடுதலையும் சில மாமனிதர்களின் எண்ணக்கருவின் கருப்பையில் உருவான கனவே என்பது அனைவரின் வாழ்வும் கூறும் சான்றுகள். இன்று மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் ‘கனவுக்காண்கிறார்’. 2020தல் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று அதுமட்டுமா இளைஞர்களே கனவுக் காணுங்கள் என்று முழங்குகிறார் அவரின் ஆழ்மனத்தில் கரு எடுத்த கனவு இன்று நம்மையும் கனவுக் காண அழைக்கின்றது. “என்னைப் பொறுத்தவரையில் வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக இந்தியா மறுவடிவம் பெறுவதற்கான ஆற்றல் இளைஞர்களிடம் உள்ளது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை”. என்கிறார் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்.இளமை - வெல்லத்துடிக்கும்: எந்த நேரத்திலும் இயங்கத்துடிப்பது இளமை. விழிகளுக்குத் தெரியாமல் புதைந்து கிடப்பதைத் தோண்டிப் பார்க்கத் துடிப்பவனே சிகரத்தைத் தொடுகிறான். சிலரைக் கொள்கைகள் ஊக்கிவிக்கும், சிலரைச் செய் கைகள் ஊக்குவிக்கும். இளையோர் சாதிக்கக் கூடியவர்கள் திறமைமிக்கவர்கள், ஆற்றல் படைத்தவர்கள், நினைத்ததை நிறைவாக முடிக்கக் கூடியவர்கள், உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள், உண்மைக்கும் நீதிக்கும் சாட்சியம் சொல்பவர்கள், வரலாற்றையே வடிவமைப்பவர்கள். இன்று இந்தியா வெற்றியடைந்த, வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது என்றால நமது இளம் தலை முறைகளின் இதயத்தில் ஏற்பட்ட தீப்பொறியாகிய கனவே காரணம். கணினி மென்பொருள்துறை, வணிகத்துறை, மேலாண்மைத்துறை, தொடர்பு சாதனைத்துறை விஞ்ஞானத்துறை, மருத்துவத்துறை. . . . இப்படி எல்லாத் துறைகளிலும் சாதனைப் புரியும் இளையத்தலைமுறையின் பெரும் சக்தியையும், ஆற்றலையும் , தன்னம்பிக்கையும் பாராட்டுவோம். இன்றும் இந்தியாவின் வளர்ச்சிககு கனவுகாண இளஞ்சிட்டுக்களுக்கு அழைப்புவிடுவோம்.இளமையை அழிக்கும் சக்திகள்: இன்று இளைஞர்களை அழிக்கும் சக்தியாக இருப்பவை வேலையில்லா திண்டாட்டமும், அரசியல் வாதிகள், பணமுதலைகளுக்கு அடியாட்களாக பயன்படும் அடிமத்தன எண்ணமுமாகும். கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள், இணையதளம், மற்றும் செல் இடைத் தொடர் பேச்சிற்கு அடிமையாதல், மேல்நாட்டுக கலாச்சாரம் ஆகியவற்றிறளகிடையே இளைஞர்களுக்கு இலட்சியப் பிடிப்பும், சிந்தனைத் தெளிவும் செயல் திறனும் அதிக மாகத் தேவைப்படுகிறது. இதைக் கொடுப்பதில் கல்வி நிறுவனங்கள் கலாச்சார அமைப்புகள், சமூகத்தொடர்புச் சாதனங்கள் ஆகியவை முனைப்போடு செயலாற்றுகின்றனள.தோல்விக்குள் புதைந்துள்ள மாபெரும் சக்திகள்: “வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்” இளமை என்னும் போதே இதயத்தில் விளைவது இனிமை, அதனுள் அடங்கியிருப்பது வலிமை. “பு லி கூடத் தயார் நிலையில் இல்லை என்றால்எலிகூட ஏறெடுத்துப் பார்க்காது”.என்பது முதுமொஒவ்வொரு இளைஞனும் தனிப்பட்ட ஆற்றல்களோடு பிறந்திருக்கிறான். உலகம் தட்டை அல்ல, உருண்டை தான் என்றதனால் கலிலியோவுக்கு விழுந்த கல்லெறிகள் எத்தனை? நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் - அவருக்கு ஏற்பட்ட தடைக்கற்கள் ஒன்றா இரண்டா? ஓராயிரமல்லவா ஆனால் அவர் கால்கள் ஓய்ந்தனவா? மனம் மயங்கியதா? இல்லையே? சந்திரனைக் கண்டது மனித சக்தி சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி இந்திரன்தான் விண்ணாட்டின் அரசன் என்ற இலக்க ணத்தை மாற்றியது மனித சக்தி.ஒரு சின்னஞ்சிறிய விதை மண்ணுக்குள் புதைக்கப்படும் பொழுது செத்துவிடுவதில்லை புவியீர்ப்பு விசையையும் விஞ்சி அது மேலே தலை உயர்த்துகிறது. மரங்கள் எல்லாம் ஒற்றைக்கால் தவசிகள். தாம் மண்ணுக்குள்ளே இருக்கும் விதை மேலே அழுத்திக்கெண்டிருக்கும் கல் பாறை அனைத்தையும் மீறி வெயிலிலும், மழையிலும், காற்றிலும் முடங்கிவிடாது, ஒற்றைக் காலில் நின்று உய ர்வேன் என்று பிடிவாதமாக வளர்ந்து உயர்கிறது. ஆறறிவுபடைத்த இளைஞனே நீ ஓரறிவு படைத்த மரத்திற்கு முன்பு தோல்வியைத் தழுவலாமா? உள்முகமாகத் திரும்பட்டும். உனக்குள் தான் எத்தனை எத் தனை தொட்டனைத்தூறும் ஜீவ ஊற்றுக் கண் கள்! சிங்க இளைஞனே, திருப்பு முகம் திற விழி என்ற பாவேந்தர் அழைப்பு உனக்குள் கேட்கவில்i லயா?இளமையின் வேகம், விவேகம்: இளைஞர்களுக்கு விவேகம் இல்லாமல் வேகம் இருப்பதால் தான், அதை வீரம் என்று நினைத்து தங்களையும் அழித்துக்கொள்கிறார்கள், பிறரையும் கொல்லுகிறார்கள். வீரம் என்பது வன்முறையில் இறங்கிப் பிறரைப் காயப்படுத்துவதா? பேருந்துகளை உடைப்பதா? மாணவிகளை எரிப்பதா? சில்லறை விஷ்யத்திற்காக, சின்னப்பிரச்சினைக்காக மனம் துவண்டு போய் செத்துப் போவதா? குஜராத்தில் வீடுகளை எரித்ததும, அப்பாவிகளை கொன்றதும், பெண்களை கற்பழித்ததும் இளைஞர்கள் தானே. வீரத்திலேயும் விவேகம் வேண்டும். இளமையில் விதைத்ததைத் தான் வாழ்க்கையின் முதுமையில் அறுவடை செய்வோம். உனக்குள் இருக்கும் மாபெரும் சக்தியைக் கொண்டு ஆக்கத்தை உருவாக்கு, அழிவினை அகற்றிவிடு. விழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எல்லாம் உழைத்துக் கொண்டே இருப்போம். நம் நாட்டை வளரும் நாடு என்னும் நிலையிலிருந்து ‘வளர்ந்த நாடு’ ஆக உருவாக்குவோம் தகுதியால், தன்னம்பிக்கையால், குறிக்கோளால், திட்டத்தால், உழைத்து, முன்னேறுவோம். ஒரு நாள் மூன்று இளைஞர்கள் முனிவரிடம் சென்றனர். அதில் ஒருவர் கையில் ஒரு பூச்சை வைத்துக் கெண்டு முனிவரிடம் கேட்டார். முனிவரே என்கையில் இருக்கும் பூச்சி உயி ருடன் இருக்கிறதா? இல்லை இறந்துள்ளதா? என்றார். அதற்கு முனிவர் கூறனார் கையில் இருக்கும் பூச்சியானது உயிரோடு இருப்பதும், இறந்து இருப்பதும் உன கையில் தான் உள்ளது என்றார் முனிவர். இது ஒரு சிறுகதையாயினும் நமது இளைஞர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நமது நாட்டின் வளர்ச்சி இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்களின் புதிய, புதிய கனவுகளும் கண்டுபிடிப்புகளும், தேடல்களும் தான் இந்திய வளர் ச்சியின் ஏணிப்படிகளாக உள்ளன. நம்பிக்கை என்பது உள்ளே நிகழும் உயிர்ச்சுவாசம் இளைய செடி களுக்கு இது ஒரு தாரக மந்திரம், விரக்தி, சலிப்பு, ஏமாற்றம் இவையனைத்தும் காற்றில்எழும் தூசிகளே நெப்போலியன் ஹூல் என்பவர் “என்னுடைய மனதில்தோன்றும் நம்பிக்கைகளே ஒரு நோக்கத்தை அடையக் காரணமாய் இருக்கின்றன” என்கிறார். இளைஞர் எண்ணத்தில் எது கருவின் கனவாக உருவெடுக்கிறதோ. அதுவே செயலாக உருவெடுத்து, கடினமாக உழைக்கச செய்கிறது. அதன் விளைவால் ஏற்படும் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் சாதனையின் உச்சிக்கு அழைத்து செல்கின்றன. நாட்டையும் வளர்ச்சிப பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

No comments:

Post a Comment