Monday, March 27, 2006

பருக்கையின் உருவாக்கம்

- ஜே.எழில் இளங்கோ -
மதுரை காமராஜர் பல்கலைக் கழக, இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் மாணவர்களால் உருவாக்கப்பட்ட குறும்படம் தான் பருக்கை. 7 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படம் 2005ஆம் ஆண்டிற்கான ஜெயா டிவியின் “டாக்கு அவார்ட்ஸ்” விருதுக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இயக்குனர் திரு.வசந்த் அவர்களின் விமர்சனத்துடன் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. இப்படைப்பின் உருவாக்கத்திற்கு, ஊக்கமும், முழு சுதந்திரமும் அளித்த எங்கள் துறைத் தலைவி திருமிகு சாந்தா அவர்களுக்கும், ஆசிரியை திருமிகு. செந்திலாதேவி மற்றும் திருமிகு மோனிகா அவர்களுக்கும் நன்றியை சமர்ப்பிக்கின்றேன். பருக்கையின் அனுபவங்களை, அதன் இயக்குனர் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.“சினிமா” எனும் கனவுத் தொழிற்சாலையில் வாய்ப்புக் கிடைக்க, தினம் தினம் செத்துப் பிழைக்கும் கலைஞர்கள் ஒருபக்கம். வாய்ப்புக் கிட்டினாலும் வெற்றிக்காக எதிர்நீச்சல் அடிப்பவர்கள் மறுபக்கம். இவற்றிற்கு எல்லாம் அடிப்படைக் காரணம், சினிமா எனும் போதைக்கு இக்கலைஞர்கள் தம்மை அடிமையாக்கிக் கொண்டனர் என்பதே! அப்படிப்பட்ட சினிமா எனும் போதைக்கு அடிமையானவர்களுள் ஒருவன்தான் நான். சரித்திரம் படைக்க வேண்டுமென்ற இலக்குடன், கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக நான் பழகிய இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள், மூலம்; நான் கற்ற சினிமாவின் தொழில்நுட்பத்தை (ஏதோ ஓரளவு) எனது அனுபவம், ரசனை ஆகியவற்றின் கலவை கொண்டு, பருக்கை எனும் படைப்பினை கலைஉலகிற்கு சமர்ப்பித்தேன்.கரு உருவான விதம்எவ்வளவோ சமூகக் கருத்துக்கள் பல இயக்குனர்களால் சொல்லப்பட்டு இருந்தாலும், புதிதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்ற ஆர்வம்தான் பருக்கைக்கு ஊன்றுகோலாய் இருந்தது. பள்ளி நாட்களில் நான் மதியஉணவு இடைவெளியில், அவசரம் அவசரமாக உணவு உண்டுவிட்டு மிஞ்சிய உணவை ஒரு பெரிய கூடையில் கொட்டுவது வழக்கம்.(ஊர் சுற்றுவதற்கும், சண்டை போடுவதற்கும்தான் இந்த அவசரம்) பள்ளிக்கூட வாசலில் மிட்டாய், குச்சிஐஸ் விற்பவர்களுடன் பேசிப் பழகிய நாட்களில்தான் ஒரு பிச்சைக்காரனின் நட்பு எனக்குக் கிடைத்தது. பள்ளியின் குப்பைக் கூடையில் கொட்டிக்கிடக்கும் மிஞ்சிய உணவுகள்தான் இவனுக்கும், இவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தினசரி உணவு. சிறுவயதில் பாதித்த, உள்வாங்கிய இச்சம்பவம்தான் பல வருடங்கழித்து எனது மூளையின் நினைவுகளை தட்டி எழுப்பி விட்டது.திரைக்கதையாக்கிய விதம் பொதுவான ஆவணப் படங்களில் வசனம், காட்சி இவற்றைத் திரைக்கதையில் எழுத்து வடிவில் கொள்வது வழக்கம். ஆனால் பருக்கையில் எந்த வசனமும், இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். (சில தவிர்க்க முடியாதக் காரணங்களினால் ஒரிரு வசனங்கள் மட்டுமே இறுதியில் சேர்க்கப்பட்டது.) அடிப்படையில் தமிழில் வரும் வியாபார சினிமாக்களை ரசிக்காத நான், யதார்த்தமான சினிமாக்களை ரசிக்கும் தீவிர ரசிகனாக இருந்தேன். அதன் பாதிப்பில்தான் இதன் திரைக்கதையை உருவாக்கினேன்.காட்சியாக்கிய விதம்காட்சிகளை யதார்த்தமாகக் காட்ட, கிடைக்கின்ற வெளிச்சம்(யுஎயடையடிடந டுiபாவ); மூலம், காட்சியாக்க வேண்டிய இடங்களுக்கு நேரில் சென்று தத்ரூபமாக எடுக்க வேண்டியக் கட்டாயத்தைப் பருக்கைக்கு இலக்காக்கிக் கொண்டேன். அதிகப்படியானோர் ஷ_ட்டிங் தளத்தில் இருந்தால், மக்களின் கவனம் திசை திரும்பி வடும் என்பதால் ஆட்கள் குறைக்கப்பட்டனர். சில காட்சிகள் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டன. (குறிப்பாக, மதுரை நீதிமன்றம் எதிரில் இருக்கும் பரபரப்பான இடத்தில், ஒரு பிச்சைக்காரனையும், பிச்சைக்காரியையும் குப்பைகள் கொட்டிய குவியலுக்குள் வைத்து எடுக்கும் காட்சி) மக்கள் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அங்கு பரபரப்பும் அதிகமாகியது. இருந்தபோதும் ஷாட் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. 10, 20 டேக்குகளுக்கு மேல் எடுத்துக் கொண்டேன். இவ்வாறு ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் திட்டமிட்டு எடுத்தோம்.முடிவுக்காக அலைந்தது....மக்களுக்கு உணர்த்த வேண்டிய சமூகக் கருத்துக்கள் பல இருந்தாலும், உணவு வீணாக்கலை அழுத்தமான முடிவு கொண்டுதான் உணர்த்த முடியும் எனக் கருதி, படக்குழுவினருடன் 15 நாட்கள் இரவு பகலாக விவாதம் செய்தோம். நல்ல முடிவு கிடைக்க வில்லை. பின்னர் பல நாட்கள் தவங்கிடந்து, மூளையைக் கசக்கிப் பிழிந்து கிடைத்ததுதான் பருக்கையின் முடிவு...அது... மாட்டின் சாணம் கூட மனிதனுக்கு எருவாகப் பயன்படுகிறது. ஆனால் மனிதன் வீணாக்கும் உணவு....? எதிர்பாருங்கள்! ஐயாடிவியில் மீண்டும் பருக்கையை......!

No comments:

Post a Comment